நாட்டிற்கான 40 வீத மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

நாட்டிற்கான 40 வீத மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம்

நாட்டிற்கான 40 வீத மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுப்பதற்கான விரிவான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்றும் தயாரிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் வருடாந்தம் 15 வீத மருந்து உற்பத்தி முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித உடுமாவல தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் மருந்து உற்பத்தி வலயங்களை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் முதலீட்டு வாரியத்தின் பங்களிப்புடன் மருந்து உற்பத்தி வலயமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வலயத்தில் சுமார் 40 முதலீட்டாளர்களுக்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்றும் தயாரிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித உடுமாவல தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, அனுராதபுரம்- ஒயாமடுவ பகுதியிலும் மருந்து உற்பத்தி வலயமொன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad