பிறந்து 37 நாட்களேயான குழந்தை கொரோனாவுக்கு பலி - தனது மன வேதனையை வெளிப்படுத்தினார் கிரீஸ் பிரதமர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

பிறந்து 37 நாட்களேயான குழந்தை கொரோனாவுக்கு பலி - தனது மன வேதனையை வெளிப்படுத்தினார் கிரீஸ் பிரதமர்

கிரீஸ் நாட்டில் பிறந்த 17 ஆவது நாளில் இருந்து 37 ஆவது நாள் வரை கொரோனா வைரசை எதிர்த்து போராடிய குழந்தை உயிரிழந்ததையடுத்து, பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரீஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இதுவரை 6 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதனால் கிரீஸ் நாட்டில் கொரோனா பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 480 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏதென்ஸ் நகரில் நவம்பர் மாதம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

என்றாலும் நோய் பரவியதால் அங்குள்ள சுகாதார அமைப்பு தாங்க முடியாத மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

தற்போது, வைரஸ் மாறுபாடு காரணமாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று எதிர்தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பிறந்து 17 நாளே ஆன ஒரு ஆண் குழந்தை மூக்கு வீக்கம் மற்றும் காய்ச்சல் காரணமாக ஏதென்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிந்தது. அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலனின்றி பிறந்த 37 ஆவது நாள் அந்த குழந்தை உயிர் இழந்தது.

இதை அறிந்த பிரதமர் (Kyriakos Mitsotakis) கிரியோக்கோஸ் மிட்சோடாகிஸ், இந்த குழந்தை இறந்ததற்கு இரங்கல் தெரிவித்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது துருதிருஷ்டவசமாக இன்று நம் நாட்டில் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் பிறந்த 17 ஆவது நாளில் இருந்து 37 ஆவது நாள் வரை கொரோனா வைரசை எதிர்த்து போராடிய ஒரு குழந்தை இறந்துள்ளது. இந்த பிஞ்சு குழந்தையை நாம் இழந்த துக்கம் தாங்க முடியாதது இவ்வாறு வேதனையுடன் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment