ரஞ்சன் ராமநாயக்கவிடம் 2 மணித்தியாலங்கள் சாட்சி விசாரணை - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

ரஞ்சன் ராமநாயக்கவிடம் 2 மணித்தியாலங்கள் சாட்சி விசாரணை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க இன்று இலங்கை பத்திரிகை பேரவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பத்திரிகையொன்றில் வௌியான செய்தி காரணமாக தம் மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைக்காக இன்று அவர் பத்திரிகை பேரவைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் இன்று அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற சாட்சி விசாரணையின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad