பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானி வெளியானது - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வர்த்தமானி வெளியானது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக நிர்ணயித்தே குறித்த வர்த்தமானி தொழில் அமைச்சரின் செயலரினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் செல்லுபடியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாவாகவும் வரவு செலவுத் திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad