உலக அளவில் 10,000 ஊழியர்களை ஆள் குறைப்பு செய்யவுள்ள Nokia நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

உலக அளவில் 10,000 ஊழியர்களை ஆள் குறைப்பு செய்யவுள்ள Nokia நிறுவனம்

தொலைத் தொடர்பு நிறுவனமான Nokia உலக அளவில் 10,000 ஊழியர்கள் வரை ஆள் குறைப்புச் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க அடுத்த 2 ஆண்டுகளில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 5ஜி கட்டமைப்பை அறிமுகம் செய்ய நிறுவனம் முயற்சி செய்துவருகிறது.

மேகக்கணிமைச் சேவை, மின்னிலக்கக் கட்டமைப்பு ஆய்வு ஆகிய அம்சங்களில் முதலீடு செய்யவும் Nokia திட்டமிடுகிறது.

உலகெங்கும் உள்ள அதன் நிறுவனங்களில் சுமார் 90,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும், 2015 ஆம் ஆண்டிலிருந்தே ஆயிரக்கணக்கான வேலைகளை அது குறைத்துவருகிறது.

கடந்த ஆண்டு, ஐரோப்பாவில் 40,000 பேரையும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 20,500 பேரையும் Nokia வேலையில் அமர்த்தியது.

உலகின் மிகப்பெரிய கையடக்க தொலைபேசி விற்பனை நிறுவனமாக முன்னர் இருந்த Nokia ஆப்பிளின் ஐபோன் மற்றும் சம்சுங்கின் கெலக்சி போன்று தொடு திரை கொண்ட கைபேசிகளை தயாரிப்பதில் பின்தங்கியதால் அதன் பிரபலம் பெரும் வீழ்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனம் தற்போது தொலைத் தொடர்பு உபகரண உற்பத்தியில் அவதானம் செலுத்தி உள்ளது.

No comments:

Post a Comment