TNA வசமிருந்த வாகரை பிரதேச சபை TMVP வசமானது - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

TNA வசமிருந்த வாகரை பிரதேச சபை TMVP வசமானது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வசமிருந்த வாகரை பிரதேச சபையின் ஆட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வசமாகியுள்ளது. 

இதனையடுத்து வாகரை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் கண்ணப்பன் கணேசன் (சூட்டி) போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

இதற்கு முன்னர் தவிசாளராக செயற்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஞானம் கோணலிங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

இதன்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த அதிகாரம் தமிழ் மக்கள் விடுதைப் புலிகள் கட்சியினரால் கைப்பற்றப்பட்டது. இப் பிரதேச சபை 18 உறுப்பினர்களை கொண்டது.

இதில் 15 உறுப்பினர்கள் நேற்று (11) சபைக்கு சமுகமளித்திருந்த போதும் அதில் 12 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 03 உறுப்பினர்கள் எதிராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தாவிசாளர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 

ஆதரவாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 02 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி 02 பேரும், தமிழர் ஐக்கிய முன்னணி இருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒருவரும் ஆதரவாக செயற்பட்டனர். 

எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருவரும், பொது ஜன பெரமுன கட்சியிலுள்ள ஒருவரும் சபைக்கு சமுகமளித்திருந்தனர்.

மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment