பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறும் குற்றச் செயல்களை விசாரிக்க விசேட குழு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறும் குற்றச் செயல்களை விசாரிக்க விசேட குழு

பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு, விசேட குழுவொன்றை ஈடுபடுத்தவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் தவறான செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறும் சில சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்காமை குறித்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பிலேயே முதலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ​மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad