நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் நாளை அங்குரார்ப்பணம் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் நாளை அங்குரார்ப்பணம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி, இரணைதீவு கடற் பிதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த பண்ணைக்கான ஆரம்ப நிகழ்வுகள் நாளை (14.02.2021) இரணைதீவில் இடம்பெறவுள்ளது.

கடற்றொழில் அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய இரணைதீவை அண்டிய கடற்பிரதேசததில் ஆய்வுகளை மேற்கொண்ட நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் கடலட்டை வளர்ப்புக்கு ஏதுவான கடல் பரப்பினை அடையாளப்படுத்தியது.

குறித்த திட்டத்திற்கு தேவையான முதலீடுகளை மேற்கொள்வதற்கும் உற்பத்தி செய்யப்படுகின்ற கடலட்டைகளை கொள்வனவு செய்து நவீன தொழில்நுட்ப முறையில் பதனிட்டு வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்வதற்கும் 45 வருட தொழில் அனுபவத்தினைக் கொண்ட ‘சுகந்த் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் முன்வந்திருந்தது.

இந்நிலையில் நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தனியார் முதலீட்டாரள்கள் இணைந்த பொறிமுறையூடாக அமைக்க தீர்மானிக்கப்பட்ட பாரிய கடலட்டைப் பண்ணையின் பயனாளர்கள் அனைவரும் இரணைதீவை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மத்தியில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது கடற்றொழில் அமைச்சரின் திட்டவட்டமான தீர்மானமாக இருந்த நிலையில், முதற் 83 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தலா 1 ஏக்கர் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான ஆரம்ப முதலீட்டுகள் அனைத்தையும் தனியார் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இலங்கையிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்ப பதனிடும் பொறிமுறை உள்ளடக்கப்பட்டதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணையின் ஊடாக சுமார் 500 உறுப்பினர்களைக் கொண்ட 83 குடும்பங்கள் நேரடித் தொழில் முனைவோராக்கப்பட்டுள்ளனர். 

இதனுடாக சுமார் 500 தொழிலாளர்கள் நேரடித் தொழில் வாய்ப்பினையும் சுமார் 400 இற்கும் மேற்பட்டவர்கள் மறைமுகமான தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டதின் அடிப்படையிலும் நேரடி வழிநடத்தலிலும் முதற்கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டத்தில் பயனாளர்களாக இணைந்து கொள்வதற்காக இரணைதீவை சேர்ந்த சுமார் 135 கடற்றொழிலாளர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment