குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளெனக் கூறி விகாரைகளில் கொள்ளை - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளெனக் கூறி விகாரைகளில் கொள்ளை

(எம்.மனோசித்ரா)

கதிர்காமம் மற்றும் அவுங்கல்ல ஆகிய பிரதேங்களில் தம்மை குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்டு இரு விகாரைகளில் சிலர் கொள்ளையடித்துள்ளனர்.

இவ்வாறு திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

புதன்கிழமை நண்பகல் கதிர்காமத்தில் அமைந்துள்ள விகாரையொன்றுக்கு சென்ற இருவர் தம்மை கொழும்பு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, குறித்த விகாரையின் விகாராதிபதியை அச்சுறுத்தி கையடக்க தொலைபேசி மற்றும் பெறுமதி மிக்க புத்தர் சிலையொன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதேபோன்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் அவுங்கல்ல பொலிஸ் பிரிவில் பலபிட்டிய - பாத்தேகம விகாரைக்கு வந்த குழுவொன்று தம்மை மேல் மாகாண குற்ற விசாரணைப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த விகாரையின் விகாராதிபதியிடம் பணத்தை கொள்ளையிட முயற்சித்து பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த இரு சம்பவங்கள் ஊடாகவும் தம்மை பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்டு திட்டமிட்டு கொள்ளையிடுகின்றமை அதிகரித்துள்ளமை தெளிவாகிறது. எனவே இவ்வாறானவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad