பரீட்சை அட்டைகள் கிடைக்கா விட்டால் தொடர்பு கொள்ளவும் - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

பரீட்சை அட்டைகள் கிடைக்கா விட்டால் தொடர்பு கொள்ளவும்

கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் பயிற்சி தரம் மற்றும் படவரைஞர் பயிற்சி தரம் ஆகிய பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை நாளை 13 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இப்பரீட்சைக்கு விண்ணப்பித்த தகைமை பெற்றிருந்த பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் யாவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரிகள் "செயலாளர் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இலக்கம் 393/ 48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியுடனோ அல்லது 0212219939 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகளுக்குரிய அனுமதி அட்டைகள் இருந்தால் மட்டுமே பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad