வவுனியா செட்டிகுளத்தில் தற்கொலை அங்கிகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

வவுனியா செட்டிகுளத்தில் தற்கொலை அங்கிகள் மீட்பு

செட்டிகுளம், சின்னத்தம்பனை பகுதியில் தற்கொலை அங்கிகள் இரண்டு பொலிசாரால் நேற்று (17) மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீரபுரம், சின்னதம்பனை பகுதியில் உள்ள சின்னக்குளத்தை அண்டிய சிறிய காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இரு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, மேலும் அப்பகுதியில் வெடி பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடும் பணிகள் தொடர்கின்றன.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment