கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் உட்பட ஆறு பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் உட்பட ஆறு பேர் கைது

வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து போதைப் பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானின் உதவியாளரான மொஹமட் அஜ்மீ எனும் நபர் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருடன் மேலும் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் இருந்து 20 கிராம் ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களை இன்று (14) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பலியந்தலை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் படோவிதா அசங்கா என்ற போதைப் பொருள் வியாபாரியை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல்களை 118 அல்லது 119 க்கு வழங்கலாம் என்றும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad