இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது அங்கொட லொக்காவின் தாய், சகோதரியின் டி.என்.ஏ. மாதிரிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது அங்கொட லொக்காவின் தாய், சகோதரியின் டி.என்.ஏ. மாதிரிகள்

அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியின் உயிரியல் மரபணு மாதிரிகள் (D.N.A) இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, உயிரியல் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்காக, இரத்த மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்டன.

இதேவேளை இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் மத்தும லசந்த சந்தன பெரேரா எனும் அங்கொட லொக்க என்பவரின் சடலம், உண்மையில் அவருடையதா என்பதை உறுதி செய்வதற்காக இந்திய தேசிய விசாரணை பிரிவு, இலங்கையிடம் உதவி கோரியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்காக அங்கொட லொக்காவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் D.N.A மாதிரியை அனுப்பி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையிலேயே அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரியின் உயிரியல் மரபணு மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment