சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவுறுத்தல்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உரிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) (h) பிரிவு மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பான சட்டத்தின் 3 (1) பிரிவின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உரிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியுடன் தொடர்பை பேணியதாக தெரிவித்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, கடந்த 10 மாதங்களாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதத்தை, பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அனுப்பியுள்ளதாக, நிஷாரா ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad