இலங்கையின் முதலாவது திண்மக் கழிவு மின்னுற்பத்தி நிலையம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

இலங்கையின் முதலாவது திண்மக் கழிவு மின்னுற்பத்தி நிலையம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது

இலங்கையின் முதலாவது திண்மக் கழிவு மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

கெரவலபிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மின்னுற்பத்தி நிலையம் இன்று (17) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

தேசிய மின்வலு கட்டமைப்பில், 10 மெகா வாற் (10MW) மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கெரவலபிட்டி திண்மக் கழிவு மின்னுற்பத்தி நிலையத்தில் (Colombo Waste to Energy Power Plant), நாளொன்றுக்கு சுமார் 600 - 800 தொன் திண்மக் கழிவுகள் தகனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நகரத்தின் மாநகர கழிவை அகற்றுவதற்கு, இதன் மூலம் நிலைபேறான தீர்வு உருவாகியுள்ளதுடன், மீள் புதுப்பிக்கத்தகு மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கு, இத்திட்டம் நிலைபேறான தீர்வாகும். கொழும்பு மாநகரசபை, Aitken Spence நிறுவனம் மற்றம் இலங்கை மின்சார சபை ஆகியன, இத்திட்டத்தின் பங்காளர்களாக காணப்படுகின்றனர்.

Aitken Spence நிறுவனம் இத்திட்டத்திற்காக ரூபா 15 பில்லியன் நிதியை செலவிட்டுள்ளதோடு, மிக அழகான, தூய்மையான மாநகர சூழலை நிர்மாணிக்கவும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிகழ்வில, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad