அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக எஸ் எம் சபீஸ் தெரிவானார் ! - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக எஸ் எம் சபீஸ் தெரிவானார் !

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பெரிய ஜும்மா பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளன பொதுக் கூட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிகவும் இள வயதில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர், தனது இளமைக் காலத்திலிருந்து தன்னை மக்கள் சேவைக்கு அர்ப்பணித்திருந்தாலும், அனர்த்த நிலைகள், கொரோனா சூழ்நிலைகளில் இவரது நடவடிக்கைகள் மக்கள் மனங்களில் அழியா இடத்தினை ஏற்படுத்தியது. 

அது மாத்திரமல்லாமல் கஷ்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு முதல் ஆளாக சென்று கரம்கொடுக்கும் இவரின் நற்பண்பினால் ஒவ்வொரு வீடுகளிலும் பெரியோர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் என மக்களின் அன்பை பெற்ற ஒருவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad