சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட போதைப் பொருட்களடங்கிய பொதி - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட போதைப் பொருட்களடங்கிய பொதி

(செ.தேன்மொழி)

களுத்துறை சிறைச்சாலையில் மதிலுக்கு மேல் இனந்தெரியாத நபர்களால் வீசப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களடங்கிய பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பொதியில் 3 தொலைபேசிகள், 45 கிராம் கஞ்சா போதைப் பொருள், 4 புகையிலைகள், புகைப்பிடித்தலுக்காக பயன்படுத்தப்படும் 5 லைட்டர்கள், 5 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 5 கடதாசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதிகளில் யாருக்காவது வழங்கும் நோக்கத்திலேயே இந்த பொதி வீசப்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad