எமது ஆட்சியில் எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியவில்லை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

எமது ஆட்சியில் எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியவில்லை - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

தமது ஆட்சிக் காலத்தின்போது எந்த ஒரு நாட்டுக்கும் தாம் அடிபணியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தம் உயிரைப் பணயம் வைத்து கட்டியெழுப்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சரிவை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் விஜய குமாரதுங்கவின் நினைவு தின நிகழ்வை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தற்போது சீனாவுக்கு அனைத்தையும் வழங்க முயற்சிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்காது மௌனம் காக்கின்றனர்.

எமது ஆட்சியின் போது நாம் சகல நாடுகளுடனும் எல்லாவற்றுக்கும் இணங்கவில்லை. அத்தகைய கொள்கையையே கடைப்பிடித்தோம். அத்துடன் எந்த ஒரு நாட்டுக்கும் தாம் அடிபணியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad