இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிகழ்ச்சி நிரல் இதோ...! - News View

Breaking

Post Top Ad

Friday, February 19, 2021

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிகழ்ச்சி நிரல் இதோ...!

(செ.தேன்மொழி)

இலங்கைக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அன்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது அவர் கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகள் பின்வருமாறு,

2021.02.23 - பிற்பகல் 4.15 - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாகிஸ்தான் பிரதமரரை வரவேற்கவுள்ளார். பின்னர் இராணுவத்தினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறும்.

2021.02.23- மாலை 6.00 - அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனான சந்திப்பு.

2021.02.23- மாலை 6.30 - அலரி மாளிகையில் அமைச்சர்கள் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தல்.

2021.02.24 - முற்பகல் 10.30 - ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவுடன் சந்திப்பு.

2021.02.2 4- முற்பகல் 11.30 - சங்கரில்லா ஹோட்டலில் இடம்பெறும் வணிகம் மற்றும் முதலீடு நிகழ்வில் கலந்துகொள்ளல்.

2021.02.24 - பிற்பகல் 12.30 - சபாநாயகர் மற்றும் விளையாட்டு அமைச்சரினால் வழங்கப்படும் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளல்.

2021.02.24 - பிற்பகல் 12.30 - நாவல - கிரிமண்டல மாவத்தையில் உயர் மட்டத்திலான மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.

2021.02.24 - பிற்பகல் 3.00 - கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியேறவுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad