எமது பிரதேச இளைஞர்களுக்கு முற்போக்கான சிந்தனையையும் ஒழுக்கத்தையும் கரப்பந்தாட்ட போட்டி உருவாக்கும் - அங்கஜன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 27, 2021

எமது பிரதேச இளைஞர்களுக்கு முற்போக்கான சிந்தனையையும் ஒழுக்கத்தையும் கரப்பந்தாட்ட போட்டி உருவாக்கும் - அங்கஜன் எம்.பி

எமது நாட்டிற்கு ஒரு சிறந்த விளையாட்டுதுறை அமைச்சராக நாமல் ராஜாபக்‌ஷ கிடைத்துள்ளார். அவர் எமது பிரதேசங்களின் விளையாட்டு முறைகளை முன்னேற்றுவதற்காக செயற்பட்டு வருகிறார். எம் இளைஞர் யுவதிகளின் திறன்களை வளர்க்க எமக்காக அயராது பாடுபடுகிறார் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் யாழ் கரப்பந்தாட்ட சுற்று போட்டிக்கான ஆரம்ப நிகழ்வும், அணிகளுக்கான வீரர்களை ஏலத்தில் தெரிவு செய்யும் நிகழ்வும் இன்று (27) யாழ்ப்பாணம் ராஜாகீறீம் ஹவுஸ் மண்டபத்தில் (தனியார்) இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் யாழ் மாவட்டத்தில் 35 மைதானம் புனரமைக்கப்படுகின்றன. அதில் கூடுதலானவை கரப்பந்தாட்ட மைதானங்களே! அத்தோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கிராமத்திற்கும் 15 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கிராமிய மைதானங்கள் புனரமைக்கப்படவுள்ளது மற்றும் ஒவ்வொரு வலயத்திற்கும் மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன, உள்ளக விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. 

யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட விளையாட்டு வீரர்களின் வேண்டுகோளிற்கிணங்க கடற்கரை பகுதியில் கரப்பந்தாட்ட மைதானங்கள் அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கிணங்க யாழில் இரண்டு கரப்பந்தாட்ட மைதானங்கள் கடற்கரைகளில் உருவாக்கப்படுகிறது. 

இதில் ஓய்வுகளில் கழிக்கும் வசதிகள், ஜிம் வசதிகள் செய்யப்பட்டு எமது வீரர்களுக்கு பயனுள்ள வகையில் அமைக்கப்படும். எனவே சொற்ப காலங்களில் எமது விளையாட்டுதுறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு நாம் முன்னேற்றகரமான பாதையில் பயணிப்போம் என்பதில் ஐயமில்லை. 

எமது பிரதேச இளைஞர்களுக்கு முற்போக்கான சிந்தனையையும் ஒழுக்கத்தையும் கரப்பந்தாட்ட போட்டி உருவாக்கும் என்பதோடு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த ஏற்பட்டாளர்களுக்கும், விளையாட்டுத் தொடரில் பங்குபற்ற போகும் வீரர்களுக்கும் ஏலம் எடுக்கும் நிறுவனங்களுக்கு பாரட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்தார்.

ஒன்பது பிரதேசங்களை குறிக்கும் ஒன்பது அணிகள் பங்குபற்ற போகும் இப்போட்டியில் 171 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 108 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு போட்டில் பங்குபற்றுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment