கட்டுநாயக்க பி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

கட்டுநாயக்க பி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா

காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர் மருத்துவ ஆய்வகத்தில் மாதிரி சோதனை ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஏனைய 6 ஊழியர்கள் கம்பாஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனால் பி.சி.ஆர். சோதனை முடிவுகளைப் பெற சிறிது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கம்பாஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகளின் மாவட்ட பணிப்பாளர் டாக்டர் நலின் அரியரத்ன தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் ஒரு நாளைக்கு சுமார் 5,000 பி.சி.ஆர். அறிக்கைகளை வெளியிடும் திறன் உள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் கட்டுநாயக்கவில் 19 கொரோனா தொற்று நோயாள்ரகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நலின் அரியரத்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad