பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 579 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளார்கள். இதற்காக உப வேந்தர்கள் மற்றும் திறைசேரியின் பங்களிப்புக் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ பீடத்திற்கு 481 மாணவர்களையும், பொறியியல் பீடத்திற்கு 565 மாணவர்களையும், தொழில்நுட்ப கல்வி பிரிவிற்கு 1,099 மாணவர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளோம். அதேபோல், விவசாயம் மற்றும் வணிகப் பிரிவிற்கு 1,803 மாணவர்களையும், கலைப் பிரிவிற்கு 1,680 மாணவர்களையும், அழகியல் சார் கல்வி பிரிவிற்கு 318 மாணவர்களையும் மேலதிகமாக இணைத்துக் கொள்ள உள்ளோம் என்றார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்கு முன்னதாக கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டள்ளது. இதற்கமைவாக முதற்கட்டத்தின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள மருத்து பீட மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad