பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீர் வசதி பெற்றுக் கொடுக்கப்படும் - அமைச்சர் வாசுதேவ - News View

Breaking

Post Top Ad

Friday, February 12, 2021

பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீர் வசதி பெற்றுக் கொடுக்கப்படும் - அமைச்சர் வாசுதேவ

(எம்.ஆர்.எம்.வசீம்)

குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர் வழங்கல் அமைச்சில் இன்று இடம்பெற்ற அமைச்சின் முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பல பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.

குறிப்பாக கிராமப் புறங்களில் இருக்கும் பாடசாலைகளிலேயே இந்த பிரச்சினை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. என்றாலும் பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் சுத்தமான குடி நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகள் தொடர்பாக அறிவிக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். அதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad