விடுவிக்கப்பட்டது கண்டி மஹியாவ பகுதிகள் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

விடுவிக்கப்பட்டது கண்டி மஹியாவ பகுதிகள்

கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கண்டி மஹியாவ பகுதி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியதன் காரணமாக கடந்த டிசம்பர் 10ஆம் திகதி முதல் 64 நாட்களாக இப்பகுதி முடக்கப்பட்டிருந்தன.

மக்கள் போக்கு வரத்து முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பிரதேச மக்களின் நீண்ட போராட்டத்தையடுத்தும் சுகாதார அதிகாரிகளால் போக்கு வரத்து தடை நீக்கப்பட்டது. 

மஹியாவையைச் சேர்ந்த எம்.சி. பிரிவு மற்றும் எம்.டி பிரிவு ஆகிய இரண்டும் கடந்த 64 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் பிரதேச மக்கள் தமது அன்றாட பணிகள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை இழந்து சிரமத்திற்கு மத்தியில் காணப்பட்டனர். 

சுமார் 2000 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பிரதேசத்தில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமீனுல்லா

No comments:

Post a Comment

Post Bottom Ad