ஹெரோயின் மற்றும் 9 இலட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் ஒருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

ஹெரோயின் மற்றும் 9 இலட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் ஒருவர் கைது

(செ.தேன்மொழி)

வெல்லம்பிட்டி - சேதவத்த பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 9 இலட்சத்திற்கும் அதிகமான பணத் தொகையுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேதவத்த பகுதியில் நேற்று பொலிஸ் போதைப் பொருள் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரான 23 வயதுடைய இளைஞனிடமிருந்து 227 கிராம் 60 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், 9 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குறித்த இளைஞன் போதைப் பொருள் கடத்தல் ஊடாகவே பணத் தொகையை சேமித்து வைத்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், பொலிஸ் போதைப் பொருள் பிரிவினர் சந்தேக நபரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad