கனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 651 பேருக்கு பக்க விளைவு - News View

Breaking

Post Top Ad

Saturday, February 13, 2021

கனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 651 பேருக்கு பக்க விளைவு

கனடாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 651 பேர் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுகின்றதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிலர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் ஏற்படும் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மரணமடைந்தவர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கனடாவின் பிரதம பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறுகையில், கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 651 பேருக்கு வேறு வகையான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அவர்களில் 99 பேருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு ஆபத்தான கட்டத்தில் உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் நேற்று வெள்ளிகிழமை வரை 12 இலட்சத்து 11 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad