மன்னார் மாவட்டத்தில் 3 ஆவது கொரோனா மரணம் பதிவானது! - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

மன்னார் மாவட்டத்தில் 3 ஆவது கொரோனா மரணம் பதிவானது!

மன்னார் மாவட்டத்தில் 3 ஆவது கொரோனா மரணம் நேற்றைய தினம் (11) பதிவாகியுள்ளது.

முசலி சுகாதார வைத்திய அதிகார பிரிவில் 73 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மூவருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் முசலிப் பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுபோல நோய் அறிகுறியுடன் வைத்தியசாலைக்குச் சென்ற ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad