மட்டக்களப்பு சிறைச்சாலைக் காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் நெல் அறுவடை - News View

About Us

About Us

Breaking

Saturday, February 13, 2021

மட்டக்களப்பு சிறைச்சாலைக் காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் நெல் அறுவடை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துறையில் அமைந்துள்ள 18 ஏக்கர் காணியில் 30 வருடங்களுக்கு பின்னர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, அங்கு அறுவடை இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அறுவடை விழா பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீவ ஜெயசேகர தலைமையில் சனிக்கிழமை 13.02.2021 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நெல்வயல் யுத்தம் இடம்பெற்றதன் காரணமாக இதுவரை காலமும் கவனிப்பாரற்ற நிலையில் இருந்து வந்தது.

தற்போது மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை சிறந்த விளைச்சலைக் கண்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் மோகன்ராஜ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைச்சாலையின் நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment