2019 O/L மீள்திருத்த பெறுபேறு வெளியீடு - 57,155 பேர் விண்ணப்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

2019 O/L மீள்திருத்த பெறுபேறு வெளியீடு - 57,155 பேர் விண்ணப்பம்

2019 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்த பெறுபேறுகள் இன்று (18) வெளியிடப்பட்டுள்ளன.

இம்முடிவுகளை தற்போது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பார்வையிடலாம் என, பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, மீள்திருத்தத்திற்கு 57,155 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் 542 இணைப்பு நிலையங்களுடன் 4,989 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 717,246 பரீட்சார்த்திகள் பரீட்சைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

பாடசாலை பரீட்சார்த்திகள் - 433,189 பேர்
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் - 284,057 பேர்

மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பெறலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சைகள் மற்றும் பெறுபேறுகள் பிரிவு
011-2784208
011-2784537
011-3188350
011-3140314

துரித இலக்கம்
1911

No comments:

Post a Comment