உலகளவில் புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 16 சதவீதமாக குறைவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

உலகளவில் புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 16 சதவீதமாக குறைவு

உலகளவில் புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 16 சதவீதமாக குறைவடைந்து 2.7 மில்லியனாக குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் புதிய இறப்புகளின் எண்ணிக்கை 10 சதவீதமாக குறைவடைந்து 81,000 ஆக குறைந்துள்ளது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஞாயிற்றுக்கிழமை வரையான கடந்த வார தரவுகளை அடிப்படையாக கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட தனது வாராந்திர தொற்று நோயியல் புதுப்பிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆறு பிராந்தியங்களில் ஐந்து புதிய நிகழ்வுகளில் இரட்டை இலக்க சதவிகித சரிவைக் கண்டன, கிழக்கு மத்திய தரைக் கடல் மாத்திரம் 7 சதவீத உயர்வைக் காட்டுகிறது.

புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆபிரிக்க மற்றும் மேற்கு பசுபிக்கில் 20 சதவீதமாகவும், ஐரோப்பாவில் 18 சதவீதமாகவும், அமெரிக்காவில் 16 சதவீதமாகவும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 13 சதவீதமாகவும் குறைவடைந்துள்ளது.

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் கூற்றுப்படி, உலகளாவிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 110 மில்லியனை நெருங்குகிறது, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 2,418,416 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர், ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், புதிய கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக குறைந்துவிட்டதாக திங்களன்று கூறினார்.

No comments:

Post a Comment