செல்லப் பிராணிகள் விற்பனை நிலையத்தில் தீக்கிரையான 100 க்கும் மேற்பட்ட விலங்குகள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

செல்லப் பிராணிகள் விற்பனை நிலையத்தில் தீக்கிரையான 100 க்கும் மேற்பட்ட விலங்குகள்

அமெரிக்காவின், இண்டியானா பொலிஸ் அமைந்துள்ள செல்லப் பிராணிகள் விற்பனை நிலையத்தில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்துள்ளதாக இண்டியான மாநில தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

'Uncle Bills' என்ற குறித்த விலங்குகள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுமார் 40 நாய்கள், 25 கிளிகள், முயல்கள் மற்றும் பிற விலங்குகள் இருந்துள்ளன.

இவற்றுள் பெரும்பாலான விலங்குகள் தீக்கிரையானதுடன், சில விலங்குகள் காப்பற்றப்பட்டும் உள்ளன. தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad