இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தீகவாபி தூபி மறுசீரமைப்பிற்கு தேவையான செங்கற்களை தயாரிக்க நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 27, 2021

இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தீகவாபி தூபி மறுசீரமைப்பிற்கு தேவையான செங்கற்களை தயாரிக்க நடவடிக்கை

தீகவாபி தூபி மறுசீரமைப்பு திட்டத்திற்கு நாளொன்றுக்கு 30,000 தரமான செங்கக்கற்கள் கோரப்படுவதால், இராணுவம், சிவில் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் செங்கற்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்தார்.

மேற்படி தூபி மறுசீரமைக்கும் உண்ணத நோக்கத்திற்கு பங்களிக்க விரும்பும் பக்தர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், இதற்கென தனியான வங்கிக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு பராமறிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வங்கிக் கணக்கில் நன்கொடைகளின் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்திய அவர், மேற்படி வங்கிக் கணக்கு விவரங்கள் தற்பொழுது ஊடகங்கள் மூலம் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது என்றார்.

அம்பாறையிலுள்ள தீகவபிய தூபி வளாகத்திற்கு நேற்று (26) நேரில் விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல குணரத்ன இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மூன்று வருட காலத்திற்குள் இந்த மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், முன்னர் இருந்தவாரே மஹா தூபி அமைக்கப்படும் என்றும் பாதுகாப்பு செயலாளர் உறுதியளித்தார்.

தீகவபியின் பிரதம சங்க நாயக்க வண. மஹோஓயா சோபித தேரோ, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அம்பாறை அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க, தேசிய புலனாய்வுப் பிரதாணி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வு), சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நானாயக்கார, இராணுவ புலனாய்வு பணிப்பாளர் பிரிகேடியர் ரொபின் ஜெயசூரிய, கட்டிடக் கலைஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோரும் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad