அறநெறி பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

அறநெறி பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.

இப்பகுதியை பொறுத்த வரையில் சகல மதங்களையும் சார்ந்த அறநெறிப் பாடசாலைகள் வார இறுதி நாட்களில் அப்பகுதி மத வழிபாட்டுத்தலங்களிலும் பொது இடங்களிலும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு வழிபாட்டுத் தலங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத போதனைகளை பெற்று வருகின்றனர்.

இவர்களை இலக்கு வைத்து போதைவஸ்து விற்பனையாளர்கள் மிகவும் சூட்சுமமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயமாக இம் மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறு இப்பிரதேச சர்வ மத மற்றும் சமூக நல அமைப்புகள் வேண்டுகோள் விடுக்கின்றன.

(இரத்தினபுரி நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad