இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - மீனவர்களுக்கு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - மீனவர்களுக்கு அழைப்பு

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை யாழ். மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

நீண்ட காலமாக இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் காரணமாக வடக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் எனினும் அண்மையில் அத்துமீறி இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

அவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மேலும் தொடர்ச்சியாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை அரசாங்கம் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாண நகரில் மாபெரும் கண்டனப் பேரணி நடாத்த உள்ளோம்.

அதாவது எதிர்வரும் புதன்கிழமை காலை யாழ் பண்ணை சுற்று வட்டத்தில் இருந்து ஆரம்பித்து கடற்தொழில் அமைச்சு இந்திய துணை தூதரகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு பேரணியாகச் சென்று இந்திய மீனவர்கள் அத்துமீறி தடுத்து நிறுத்துமாறு மகஜர் கையளிக்கவுள்ளதாக தெரிவித்ததோடு குறித்த போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

நேற்றைய தினம் அனைத்து மாவட்ட மீனவ சங்கங்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் தடுக்க உதவி புரிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment