இலங்கைக்கு கொண்டு வரப்படும் தடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 27, 2021

இலங்கைக்கு கொண்டு வரப்படும் தடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்படும்

இந்தியாவில் இருந்து நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் கொவிட் தடுப்பூசி முதல் கட்டமாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும், கொவிட்க்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது.

நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க இதனை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி ஏற்றும் முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

2ஆம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணும், பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலில் நாட்டின் தலைவர் அதாவது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த தடுப்பூசியை ஏற்றிக் கொள்வார்கள். இதன் மூலம் இந்த தடுப்பூசி தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும். இந்த தடுப்பூசியின் மூலம் பெரும்பாலும் நாட்டு மக்களை இந்த கொடூர வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கூடியதாக இருக்கும்.

எமக்கு இருக்கும் வசதிகள் இதனை களஞ்சியப்படுத்துவதற்கு போதுமானதாக இருந்துள்ளமை அதிஷ்டமாகும். முதலில் உலகில் கண்டுப்பிடிக்கப்பட்ட பைசர் தடுப்பூசிக்கு களஞ்சியப்படுத்துவதற்கு குளிர்சாதன வசதி பெருமளவில் தேவை. தற்பொழுது நாம் இந்தியாவில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் தடுப்பூசிக்கு சர்வதேச சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் இருந்து நாளை கொண்டு வரப்படவுள்ள Oxford AstraZeneca தடுப்பு மருந்துக்கு எமது NMR நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூன்றாம் கட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. இலங்கையின் சனத் தொகையில் இவர்களின் எண்ணிக்கை 34% ஆகும் அதாவது 3.4 தொடக்கம் 3.5 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக சீனா 70 இலட்சம் தடுப்பு மருந்துகளை வழங்கவுள்ளது. இதேபோன்று ரஷ்யாவும் எமக்கு தடுப்பு மருந்துகளை வழங்கவுள்ளது.

இந்த மருந்துகளுக்கான அங்கீகாரம் சர்வதேச ரீதியில் இன்னும் கிடைக்கவில்லை. இதேபோன்று எமது NMR நிறுவனம் இது தொடர்பாக விரவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிறுவனம் எந்த தடையீடுகளும் இன்றி சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment