மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடாத்தப்படும், நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் - திலீபன் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடாத்தப்படும், நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் - திலீபன் எம்.பி.

நிச்சயமாக மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கு. திலீபன் தெரிவித்தார்.

நேற்று (03) வவுனியா கருப்பனிச்சான் குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,  மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களது கட்சியின் நிலைப்பாடாகும். அந்த மாகாண சபைத் தேர்தலிலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்தம் பட்சத்தில்தான் வட மாகாணம் வளமான மாகாணமாக வரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 

சுதந்திர கட்சியினர் ஏற்கனவே இருந்த மாகாண சபையை கூட்டுமாறு தெரிவிப்பது அது அவர்களுடைய கருத்தே தவிர அது முடிவல்ல.

பெரும்பான்மையிலுள்ள அரசில் முக்கிய பதவியில் இருக்கும் எமது அமைச்சர் கூட மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என விரும்புகிறார்.

அவருக்கு நல்லதொரு சமிக்ஞை கிடைத்தபடியால்தான் எல்லா கூட்டங்களிலும் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும், நடாத்தப்பட வேண்டும் என கூறி வருகின்றார். ஆகவே நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படும் என தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad