நல்ல முடிவு எட்டவிருந்த நேரத்தில்தான் ஈஸ்டர் தின தாக்குதல் நடந்தது - சுரேன் ராகவன் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

நல்ல முடிவு எட்டவிருந்த நேரத்தில்தான் ஈஸ்டர் தின தாக்குதல் நடந்தது - சுரேன் ராகவன்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு எட்டப்படுமென தான் எதிர்பார்ப்பதாக வட மாகாண முன்னாள் ஆளுநரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

'தமிழ் அரசியல் கைதிகள் விடயம் பற்றி நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் பேசியிருக்கிறேன். வட மாகாண ஆளுநர் என்ற ரீதியில் அப்போது இருந்த அதிகாரிகளிடம் தமிழ் அரசியல் கைதிகளைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். 

இந்த விடயத்தை முக்கியமானதாகக் கருதுமாறும், அது நல்லிணக்க நடைமுறையை பலப்படுத்தும் என்றும் நான் கூறியிருக்கின்றேன். இது தொடர்பாக நாம் ஒரு நல்ல முடிவை எட்டவிருந்த நேரத்தில்தான் ஈஸ்டர் தின தாக்குதல் நடந்தது. 

அதன் பின் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மீண்டும் பழைய நிலைக்கே திரும்ப வேண்டியதாயிற்று' என்று கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

இதற்கு ஏதாவதொரு வகையிலான தீர்வு விரைவில் வரும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad