இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..! - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 5, 2021

இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..!

இரண்டு நாள் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரிலேயே வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் இன்று மாலை 4.20 க்கு நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரு நாட்களில் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் சந்திப்புகளை மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ விஜயம் 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகரின் முதல் வருகையை குறிக்கும் அதே வேளையில், இது புத்தாண்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஜெய்சங்கருக்கான முதல் வெளிநாட்டு பயணமென்பதும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad