ஏறாவூர் நகரில் கடைத் தெருக்கள் பூட்டு - நண்பகலுக்கு முன்னர் வீடு வந்த மாணவர்கள் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

ஏறாவூர் நகரில் கடைத் தெருக்கள் பூட்டு - நண்பகலுக்கு முன்னர் வீடு வந்த மாணவர்கள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகரில் திங்களன்று கடைத் தெருக்கள் பூட்டப்பட்டிருந்தன. எனினும் அரச காரியாலயங்கள், வங்கிகள், தபாலகங்கள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் என்பவை இயங்கின.

நண்பகலுக்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் வீடு வந்து சேர்ந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். போக்கு வரத்து இடம்பெற்றபோதும் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

கொரோனா தவிர்ப்பு செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின்படி திங்கட்கிழமை 11.01.2021 முதல் வியாழக்கிழமை 14.01.2021 வரை பலசரக்குக் கடைகள், புத்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படுதல் வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்ததாக ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்.ஆர். ஷியாவுல்ஹக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad