பாடசாலை மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடரும் - புதிய உடன்படிக்கை கைச்சாத்தானது - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

பாடசாலை மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடரும் - புதிய உடன்படிக்கை கைச்சாத்தானது

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள சுரக்ஷா காப்புறுதித் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் எதிர்வரும் 2021 டிசம்பர் முதலாம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அதற்கிணங்க இக்காப்புறுதி திட்டத்தை நீடிக்கும் புதிய ஒப்பந்தத்தில் நேற்று கல்வியமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.

இக்காப்புறுதியின் பயன்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் கல்வியமைச்சுக்கிடையில் விஷேட உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன் காப்புறுதி திட்டத்திற்கான காலப்பகுதி எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மேற்படி உடன்படிக்கை 2020 மே 31ஆம் திகதி முதல் 2020 செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியை இலக்காகக் கொண்டே கைச்சாத்திடப் பட்டிருந்தது. 

அதேவேளை கடந்த வருடம் மே 30ஆம் திகதிக்கு பின்னரான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்ள அதற்கான விண்ணப்பங்களை பெற்றுத்தருமாறு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயக்கம்

No comments:

Post a Comment