மன்னார் மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

மன்னார் மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா

மன்னார் மாவட்டத்தில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை மன்னார் மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் மூவர் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். ஏனைய இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசிச்சைக்காக சென்றபோது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரில் ஒருவர் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண். அவருடைய கணவர் வெளி மாவட்டத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ஏனைய நபர் புதுக்குடியிறுப்பு பகுதியை சேர்ந்தவர்.

இவர்களுடன் நெருங்கியை தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களை சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad