தற்போதைய அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியாவார் : அவர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே உள்ளவரென்கிறார் சோதிடர் சந்திரசிறி - News View

Breaking

Post Top Ad

Friday, January 1, 2021

தற்போதைய அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியாவார் : அவர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே உள்ளவரென்கிறார் சோதிடர் சந்திரசிறி

இலங்கைக்கு அடுத்த முறை புதிய தலைமைத்துவம் ஒன்று கிடைக்கவுள்ளதாக இலங்கையின் பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுவதாகவும் அவர் சிம்ம ராசி உடையவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ராஜபக்ஷ குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவராவார். அவரது பெயரை தற்போது வெளிப்படுத்த முடியாது. அவரது ஜாதகம் என்னிடம் உள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவில்லை என்றால் துப்பாக்கியால் நானே என்னை சுட்டுக் கொல்வதாக நான் கூறியிருந்தேன். எனினும் அது சோதிடத்தில் இருந்த விடயம் அல்ல.

மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் வெற்றி பெற செய்வதற்கே அன்று நான் அவ்வாறு கூறினேன்.

இணையத்தள ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad