ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Saturday, January 9, 2021

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

தான் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், கடந்த 10 நாட்களில் தன்னை தொடர்பு கொண்டோர், உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பமான புதுவருட பாராளுமன்ற அமர்வில் ரஊப் ஹக்கீம் எம்.பி. கலந்து கொண்டதாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளதோடு, அவருடன் மிக நெருக்கமாக தொடர்பு கொண்டவர்கள் தொடர்பிலான விபரத்தை அறிய பாராளுமன்ற CCTV காட்சிகள் பார்வையிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக ரஊப் ஹக்கீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய பாராளுமன்ற கொத்தணி ஒன்று உருவாகும் வாய்ப்பு ஏற்படுமா என்பது தொடர்பில், சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருவதோடு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad