ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகையலங்கார நிலையங்களைத் திறக்க விசேட கட்டுப்பாடு - News View

Breaking

Post Top Ad

Thursday, January 14, 2021

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சிகையலங்கார நிலையங்களைத் திறக்க விசேட கட்டுப்பாடு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். தாரிக் தலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகையலங்கார நிலையங்களைத் திறப்பது தொடர்பாக விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை சுகாதார வைத்திய அதிகாரி கேட்போர் கூடத்தில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். தாரிக் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, சிகையலங்கார வேலைகளில் ஈடுபடுவோருக்கான கட்டுப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு சிகையலங்கார வேலைகளில் ஈடுபடுவோர் சுகாதாரப் பகுதியினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மேலும், சிகையலங்கார நிலையத்திற்கு வருவோர் முகக் கவசம் அணிதல், அதிகமானோர் கடைகளில் அமர்ந்திருக்க முடியாது. முடி வெட்டும் போது அணிவதற்காக துணி உரியவர்கள் கொண்டு வர வேண்டும். வருபவர்களின் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பன நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

அத்தோடு, சுகாதாரப் பிரிவினர் குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு வருகை தரும் போது வழங்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறையில் செயற்படுத்தாமல் காணப்படும் நிலையங்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், ஓட்டமாவடிப் பிரதேச சபையினால் வழங்கப்படும் வருடாந்த வியாபார சான்றிதழ் மீள்பரிசீலனை செய்யப்படுவதுடன், சிகையலங்கார நிலையத்திலுள்ளவர்கள் அனைவருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad