சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க

நீர்கொழும்பு, பல்லன்சேன இளம் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட, ரஞ்சன் ராமநாயக்க அங்குணகொலபெலஸ்ஸ சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த ஜனவரி 12ஆம் திகதி, உச்ச நீதிமன்றினால் நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, சிறைக்கு அனுப்பப்படும் முன், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (26) பிற்பகல் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாற சிறைக்கு அழைத்து வரப்பட்டதாக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad