சம்மாந்துறையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்குதலும் கட்டிட திறப்பு விழாவும் - News View

Breaking

Post Top Ad

Thursday, January 14, 2021

சம்மாந்துறையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்குதலும் கட்டிட திறப்பு விழாவும்

நூருல் ஹுதா உமர் , ஐ.எல்.எம். நாஸிம்

சம்மாந்துறை பிராந்திய மக்களின் மிக நீண்டகால சுகாதார தேவைகளை நிறைவேற்றுமுகமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்களை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம். அஸாத் அவர்களிடம் நேற்றுமுன்தினம் (12) கையளித்தார். 

அத்துடன் புதிதாக வைத்திசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கிளினிக் கட்டத் தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட கட்டத்தொகுதி என்பனவும் நேற்று திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் றஜாப்,பிராந்திய திட்டமிடல் வைத்தியர் டாக்டர் எம்.சி.எம். மாஹிர், வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad