தொடரும் என் மீதான குற்றச்சாட்டு குறித்து கோபம் இருந்தாலும், நான் வன்முறையை விரும்பவில்லை - டொனால்ட் டிரம்ப் - News View

Breaking

Post Top Ad

Wednesday, January 13, 2021

தொடரும் என் மீதான குற்றச்சாட்டு குறித்து கோபம் இருந்தாலும், நான் வன்முறையை விரும்பவில்லை - டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தான் வன்முறையை விரும்பவில்லை என்றார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6ம் திகதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமனறத்தின் உள்ளே வரை சென்று நடத்தப்பட்ட இந்த வரலாற்றுமிக்க கலவரத்தில் ஒரு கேபிடல் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் கேபிடல் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.

இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்க கோரிக்கை வலுத்தது. ஆனால் தன்மீது குற்றம் சாட்டுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கடும் கோபம் இருப்பதாகவும், ஆனால் அவர் வன்முறையை விரும்பவில்லை என்றும் கூறினார்.

டெக்சாஸின் அலமோவில் உள்ள எல்லைச் சுவருக்கு பயணம் மேற்கொண்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது நான் எந்த வன்முறையும் விரும்பவில்லை. என் மீதான இந்த குற்றச்சாட்டுகள் எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது. 

ஆனால் அவர்கள் தொடர்ந்து என்மீது குற்றம் சாட்டுகின்றனர். அது உண்மையில் அவர்கள் செய்யும் ஒரு பயங்கரமான விஷயம். கேபிடல் தாக்குதல் தொடர்பாக போராட்டத்தை தூண்டியது என்ற தொடர்ச்சியான குற்றஞ்சாட்டும் நடவடிக்கை, தனக்கு எதிரான சூழ்ச்சியின் தொடர்ச்சியாகும் என தெரிவித்தார்.

ஆனால் கலவரத்தைத் தூண்டுவதற்கு எந்தப் பொறுப்பையும் அவர் ஏற்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad