கொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..! - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 26, 2021

கொலை செய்யப்பட்ட இளைஞனின் கையை துண்டித்து வேறு இடத்தில் வீசி சென்ற கொலையாளிகள்..!

(செ.தேன்மொழி)

மிடியாகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிடியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னால் நேற்று இளைஞரொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இனந்தெரியாத நபர்கள் சிலர் உயிரிழந்த இளைஞனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன், இளைஞனின் ஒரு கையை துண்டித்து எடுத்துச் சென்று மிடியாகொட நான்காவது சந்தி பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், பலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மிடியாகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மிடியாகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad