அனைத்து பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுக்கும் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

அனைத்து பள்ளிவாசல்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுக்கும் அறிவிப்பு

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்/பொறுப்பாளர்களுக்கு, பள்ளிவாசல்களில் கோவிட்19 தொடர்பான வரையறைகளை தளர்த்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அமைச்சின் மேலதிக செயலாளரின் (மத விவகாரங்கள்) 07.01.2021 ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இலங்கை வக்புகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமானது பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

1. அனைத்து பள்ளிவாசல்களிலும் எந்த நேரத்திலும் எந்தத் தொழுகைக்கும் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ள முடியும்.

2. ஐம்பது நபர்களை தேர்ந்தெடுக்கும் முறை தொடர்பாக ஜமாத்தினருக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட வேண்டும்.

3. ஏனைய வழக்கமான சமய நடவடிக்கைகள் மற்றும் திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் எந்த நேரத்திலும் அதிகபட்சம் 50 நபர்களுக்கு உட்பட்டதாக மேற்கொள்ள முடியும்.

4. சுகாதார/பாதுகாப்பு தரப்பினரின் விதிமுறைகளையும் முன்னர் வக்ப் சபையினால் விதிக்கப்பட்ட வழிகாட்டல்களையும் தொடர்ந்தும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

5. தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்தும் மூடி வைத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment