கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது என்பது சாத்தியப்படாத விடயம் - சிவஞானம் - News View

Breaking

Post Top Ad

Monday, January 4, 2021

கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது என்பது சாத்தியப்படாத விடயம் - சிவஞானம்

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தான் இணைந்து செயற்பட தாயாராக உள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமின்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவித்திருந்தார்.

விநாயகமூர்த்தி முரளிதரனின் குறித்த கருத்து தொடர்பில் இன்றைய ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே சீ.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என சீ.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad